Home நாடு முன்னாள் கோத்தா திங்கி நாடாளுமன்ற உறுப்பினர் கையூட்டு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டார்!

முன்னாள் கோத்தா திங்கி நாடாளுமன்ற உறுப்பினர் கையூட்டு விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டார்!

779
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: முன்னாள் கோத்தா திங்கி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ நூர் ஏஷானுடின் முகமட் ஹருண் நாராசிட் இன்று ஞாயிற்றுக்கிழமை, இரண்டு கையூட்டுக் குற்றங்களுக்காக அமர்வு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.  230,000 ரிங்கிட் பணத்தை கையூட்டாகப் பெற்றதற்கு நேற்று (சனிக்கிழமை) புத்ராஜெயாவில் அவர் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.

2013 மற்றும் 2014-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், 50,000 ரிங்கிட் பணத்தையும், ஒரு ஹெக்டர் நிலத்தையும் பெற்றதற்கு, அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆயினும், நீதிபதி காமாருடின் காம்சுன் முன்னிலையில் அவ்விரண்டு குற்றங்களையும் நூர் மறுத்து விசாரணைக் கோரினார்.

பெல்டா நிறுவனத்தின் முன்னாள் வாரிய உறுப்பினருமான நூர், இவ்விரண்டு கையூட்டுகளையும் கார்யா ஹிடாயா செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து பெற்றதாகக் கூறப்படுகிறது.