Home நாடு எங்கள் பலத்தை உணர்ந்ததால், அவதூறுகள் எழுந்துள்ளன!- நிக் அப்டு

எங்கள் பலத்தை உணர்ந்ததால், அவதூறுகள் எழுந்துள்ளன!- நிக் அப்டு

858
0
SHARE
Ad

கோத்தா பாரு: அம்னோ கட்சியிடமிருந்து 90 மில்லியன் ரிங்கிட் நிதி பெற்றதாகக் கூறப்படுவது பழைய விவகாரம் என பாஸ் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் நிக் முகமட் அப்டு நிக் அப்துல் அசீஸ் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு போட்டியைத் தரக்கூடிய வல்லமை பாஸ் கட்சிக்கு இருப்பதை உணர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக வேண்டுமென்றே சில தரப்பினர் அவதூறுகளை பரப்பிவருவதாக அவர் கூறினார்.

அம்னோவை ஒரு போட்டியாளராக அவர்கள் பார்க்கவில்லை, ஆனால் அம்னோவுடன் இணைந்து நாங்கள் ஒரு கூட்டணியைத் தொடங்குவது உட்பட சில சுவாரஸ்யமான அரசியல் நடவடிக்கைகளை தொடங்கும் போது, அவர்களுக்கு அது மிகவும் இக்கட்டான தன்மை மற்றும் சிக்கல் நிறைந்ததாக அமைந்துவிட்டது. நாட்டின் அரசியல் நிலையில் எங்களது நிலையைப் புரிந்து கொண்டார்கள். அதனால்தான் தற்போது அவதூறுகள் எழத் தொடங்கியுள்ளன” என நிக் விவரித்தார்.