Home நாடு நஜிப் மீதான ஏழு குற்றச்சாட்டுகள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும்- டோமி தோமஸ்

நஜிப் மீதான ஏழு குற்றச்சாட்டுகள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும்- டோமி தோமஸ்

777
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 42 மில்லியன் ரிங்கிட் நிதி சம்பந்தப்பட்ட, ஏழு குற்றச்சாட்டுகளை சுமந்து இருக்கும் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வழக்கு விசாரணை, வருகிற பிப்ரவரி 25-ஆம் தேதி தொடங்கப்பட வேண்டும் என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் கேட்டுக் கொண்டார்.

இந்த விவகாரம் குறித்து தாம் அமர்வு நீதிமன்றத் தலைவருக்கு கடிதம் ஒன்றினை அனுப்ப உள்ளதாகவும், கூடுமான வரையில் இந்த வழக்குகள் விரைவில் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் தோமஸ் தெரிவித்தார்.

நஜிப் மீதான இந்த ஏழு குற்றச்சாட்டுகளும் இன்று, செவ்வாய்க்கிழமை தொடங்கியிருக்க வேண்டியிருந்தது.

#TamilSchoolmychoice

ஆயினும், நஜிப்பின் மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரையிலும், இந்த ஏழு குற்றச்சாட்டுகளுக்கான விசாரணைகளையும், தற்காலிகமாக இடைநீக்கம் செய்யக் கோரியதால், அமர்வு நீதிமன்றம் இந்த விசாரணையை ஒத்தி வைத்தது.