ஜோர்ஜ் டவுன்: இந்திரா காந்திக்கு உதவுவதற்கு தம்மால் இயன்றதை, அலுவல்களுக்கு மத்தியில் செய்து வருவதாக மனித வளத்துறை அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.
ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இந்திராவின் வழக்கை முதன் முதலாக வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த குலசேகரன், தற்போது மற்ற வழக்கறிஞர்களை, அவருக்கு உதவும் பொருட்டு வலியுறுத்தி உள்ளதாக தெரிவித்தார். ஆயினும், இந்த விவகாரம் குறித்து தாம் யாரையும் வற்புறுத்த முடியாது என அவர் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணி, ஆட்சிக்கு வந்த பின்னரும், இந்திராவின் வழக்கில் முன்னேற்றம் ஏற்பட்டவாறு தெரியவில்லை.
இதற்கிடையே, மஇகா மத்திய செயற்குழு உறுப்பினர் எஸ். ராஜா, இந்திரா காந்தியின் கணவரையும், அவர் குழந்தையையும் தேட முடியவில்லையென்றால், குலசேகரனை அமைச்சர் பதவியை விட்டு விலகும்படி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.