Home நாடு 90 மில்லியன் ரிங்கிட் பணத்தை பாஸ் கட்சி பெறவில்லை!

90 மில்லியன் ரிங்கிட் பணத்தை பாஸ் கட்சி பெறவில்லை!

695
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1எம்டிபி நிதியிலிருந்து 90 மில்லியன் ரிங்கிட் தொகை, பாஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுக்கு அனுப்பப்படவில்லை என மலேசியா கினி செய்தி நிறுவனம் பதிவிட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் அதிகாரியின் தகவலின்படி, அத்தொகையானது பாஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படவில்லை என அது குறிப்பிட்டிருந்தது.

ஆயினும், பாஸ் கட்சித் தலைவர்களின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளை, இன்னும் ஆய்வுக்கு உட்படுத்தவில்லை என அது குறிப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் எந்தவொரு ஊகத்தையும் வெளியிட விரும்பவில்லை என நேற்று அறிவித்திருந்தது.