Home நாடு சீ பீல்ட்: அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்தின் ஆணையை மதித்து செயல்பட வேண்டும்!

சீ பீல்ட்: அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்தின் ஆணையை மதித்து செயல்பட வேண்டும்!

820
0
SHARE
Ad

ஷா அலாம்: சீ பீல்ட் கோயில் விவகாரத்தில் அனைத்து தரப்பினரும் நீதிமன்றத்தின் ஆணையை மதிக்க வேண்டும் என சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

சீ பீல்ட் கோயிலின் இடத்தை மாற்றுவதிலிருந்து தடுக்க, 50 இந்தியர்கள் உயர் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்ததை நேற்று உயர் நீதிமன்றம் நிராகரித்ததைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்.

பொது ஒழுங்கு மற்றும் சட்ட மேன்மையை உறுதிப்படுத்தும் வகையில், அனைவரும் இம்முடிவினை ஏற்றுக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

மாநில அரசு அனைத்துக் கட்சிகளுடனும் ஒத்துழைக்கத் தயாராக உள்ளது. நீதிமன்றத்தின் தீர்ப்பினை மதித்து, அதற்கான தக்க நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசு செயல்படும்” என அவர் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்தார்.