வாசிங்டன்: அமெரிக்கா, மெக்சிகோ இடையில் எல்லைச்சுவர் கட்டும் விவகாரத்தில் அவசரகால அதிகாரத்தை தாம் பயன்படுத்த இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உறுதிபடுத்தி உள்ளார்.
ஜனநாயக கட்சி அவரின், எல்லைசுவர் எழுப்பும் திட்டத்தினை, எதிர்த்து வரும் வேளையில், தமது அந்த முடிவில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்பதை டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அமெரிக்க அரசுத்துறைகள் செயல்பாட்டுக்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யும் மசோதாவுக்கு டிரம்ப் அனுமதி கொடுக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தனது எல்லைச்சுவர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் ஒப்புதல் தெரிவித்தால் மட்டுமே அமெரிக்க அரசுத்துறைகளின் பகுதியளவு முடக்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டிப்ரம்பின் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், அரசுத்துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால், தாமே நாட்டில் அவரநிலையை அறிவித்து விட்டு, அதன் மூலம் கிடைக்கபெறும் அதிகாரத்தைக் கொண்டு எல்லைசுவர் கட்டுவதற்கான நிதியை தாமே ஒப்புதல் வழங்க உள்ளதாக அவர் கூறி வருகிறார்.