Home நாடு ஊழியர் சேமநிதி வாரியம் 6.15 விழுக்காடு இலாப ஈவு அறிவித்தது

ஊழியர் சேமநிதி வாரியம் 6.15 விழுக்காடு இலாப ஈவு அறிவித்தது

705
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தொழிலாளர்களின் சேமிப்பு நிதியான ஊழியர் சேமநிதி வாரியம் 2018-ஆம் ஆண்டுக்கான இலாப ஈவு விழுக்காடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, பாரம்பரிய முறையிலான சேமிப்புகளுக்கு 6.15 விழுக்காடு இலாப ஈவு வழங்கப்படும். இதற்காக 43 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது.

ஷாரியா எனப்படும் இஸ்லாமிய முறைப்படியிலான சேமிப்புகளை வைத்திருப்போர் 2018-ஆம் ஆண்டுக்கு 5.9 விழுக்காட்டு இலாப ஈவு பெறுவர். இதற்காக 4.32 பில்லியன் ரிங்கிட் செலவிடப்படும்.

#TamilSchoolmychoice

ஆக, 2018-ஆம் ஆண்டுக்கான இலாப ஈவாக மொத்தம் 47.32 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்படுகிறது. இது 2017-ஆம் ஆண்டுக்கான இலாப ஈவை விட 1.7 விழுக்காடு அதிகமாகும்.

இதற்கிடையில், இலாப ஈவு விவரங்களை அறிவித்த ஊழியர் சேமநிதி வாரியத்தின் தலைவர் டான்ஸ்ரீ சம்சுடின் ஓஸ்மான், கடந்த ஆண்டு முதலீட்டு வருமானமாக 50.88 பில்லியன் ரிங்கிட்டை வாரியம் பெற்றது எனவும் கூறினார்.

இதில் 4.62 பில்லியன் ஷாரியா சேமிப்புகளாகப் பெறப்பட்டன. 46.26 பில்லியன் ரிங்கிட் பாரம்பரிய சேமிப்பு முறையில் பெறப்பட்டன.