Home கலை உலகம் ஆர்யா – சாயிஷா திருமணம் உறுதியானது

ஆர்யா – சாயிஷா திருமணம் உறுதியானது

965
0
SHARE
Ad

சென்னை – நீண்டகாலமாக கோலிவுட் வட்டாரங்களில் எப்போது திருமணம் செய்வார் – யாரைக் கைப்பிடிப்பார் – என நடிகர் ஆர்யா குறித்து நிலவி வந்த ஆரூடங்களும் ஊகங்களும் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளன.

காதலர் தினத்தை முன்னிட்டு ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் சாயிஷாவுடனான திருமணத்தை உறுதி செய்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையிலான திருமணம் எதிர்வரும் மார்ச் 10-ஆம் தேதி ஐதராபாத் நகரில் நடைபெறவிருக்கிறது.

சாயிஷா அண்மையக் காலமாக தனது நடனத் திறனாலும், அழகாலும், தமிழ்ப் பட இரசிகர்களைக் கவர்ந்து வந்தார். 38 வயதான ஆர்யாவுடனான இவரது திருமணம் திரையுலகினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. காரணம், சாயிஷாவுக்கு 21-வயதுதான் ஆகிறது எனக் கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

இந்தித் திரையுலகின் மூத்த முதுபெரும் நடிகர் திலீப்குமார் – சயிரா பானு தம்பதியரின் பேத்தியான சாயிஷா, கடைக்குட்டி சிங்கம், வனமகன், கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

கஜினிகாந்த் படத்தில் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும்போது, சாயிஷாவுக்கும் அவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன.