Home நாடு “சிலாங்கூர், பினாங்கை அடிப்படையாகக் கொண்டு எங்களை மதிப்பிடவும்!”- அமிருடின்

“சிலாங்கூர், பினாங்கை அடிப்படையாகக் கொண்டு எங்களை மதிப்பிடவும்!”- அமிருடின்

694
0
SHARE
Ad

செமினி: நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை மதிப்பிடுவதென்றால், சிலாங்கூர் மற்றும் பினாங்கு மாநிலங்களில் அக்கூட்டணியின் சிறந்த செயல்திறன்களை அடிப்படையாகக் கொள்ளுமாறு சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை), செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ஆயினும், அக்கூட்டத்தில் பங்குக் கொண்டோரின் எண்ணிக்கை குறைவாகப் பதிவிடப்பட்டிருந்தது.

இதற்கிடையே, நேற்று அதே நேரத்தில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் மற்றுமொரு நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்றப்படாத சில உறுதிமொழிகளால் நம்பிக்கைக் கூட்டணி செமினி இடைத் தேர்தலில் வெற்றிப் பெறுவது கடினமாகி உள்ளதை பிரி மலேசியா டுடே செய்தித் தளம் குறிப்பிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

கடந்த ஜனவரி 11-ஆம் தேதி செமினி சட்டமன்ற உறுப்பினர் பக்தியார் முகமட் நூர் (57 வயதுமாரடைப்பால் காலமானதைத் தொடர்ந்துவருகிற மார்ச் 2-ஆம் தேதி அந்தத் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.