Home Video சிவகார்த்திகேயனின் “மிஸ்டர் லோக்கல்” – நயன்தாரா இணை!

சிவகார்த்திகேயனின் “மிஸ்டர் லோக்கல்” – நயன்தாரா இணை!

3867
0
SHARE
Ad

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை ஒட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை), அவர் நடித்து வெளியாக உள்ள மிஸ்டர் லோக்கல் எனும் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியிடப்பட்டது. சீமராஜா படத்தைத் தொடர்ந்து இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகலேடி சூப்பர் ஸ்டார்’ என அழைக்கப்படும் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, சதீஷ் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயனின் 34-வது பிறந்தநாளை முன்னிட்டு மிஸ்டர் லோக்கல் படத்தின் முன்னோட்டம் நேற்று வெளியானது . இந்த திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சியை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் காணலாம்:

#TamilSchoolmychoice