Home கலை உலகம் பொன்னியின் செல்வன்: மீண்டும் மணிரத்னமுடன் இணையும் விஜய் சேதுபதி!

பொன்னியின் செல்வன்: மீண்டும் மணிரத்னமுடன் இணையும் விஜய் சேதுபதி!

1066
0
SHARE
Ad

சென்னை: செக்கச்சிவந்த வானம் திரைப்படத்திற்குப் பின்னர் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் மணிரத்னமுடன் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க உள்ளதாகக் கூறி பின்பு அப்படத்தில் இருந்து அவர் விலகிக் கொண்டதாக செய்திகள் வெளியாயின. ஆயினும், அப்படத்தில் அவர் நடிப்பது உறுதி என அப்படத்தின் நெருங்கிய வட்டாரம் தெரிவித்துள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படம் இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுத் திரைப்படமாக் அமைகிறது. பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் தற்போது அவர் இறங்கியுள்ளார்.

ஏற்கனவே, நடிகர் விஜய், மகேஷ் பாபு போன்ற நடிகர்களை வைத்து இயக்க இருந்தார். ஆயினும், நிதிப் பிரச்சனையால் அத்திட்டம் கைக்கூடாமல் போனது. தற்போது, விக்ரம், விஜய் சேதுபதி, சிம்பு, மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை வைத்து மீண்டும் இத்திரைப்படத்தை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்னும், ஒரு சில மாதங்களில் இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.