இன்று காலை புத்ரா ஜெயாவிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்தில் அவர் கைது செய்யப்பட்டதை அதன் துணை ஆணையர் அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.
47 வயதான அந்த வழக்கறிஞர் நாளை அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார். அவர் மீது கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்னோ, தேசிய முன்னணி தவிர்த்து முன்னாள் பிரதமர் நஜிப் சார்பிலும் ஹஃபாரிசாம் ஹருண் பிரதிநிதித்து வழக்காடியுள்ளார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.