2014-க்கும் 2015-க்கும் இடையிலான காலகட்டத்தில் 15 மில்லியன் ரிங்கிட் ஊழல் மற்றும் கள்ளப் பணப் பரிமாற்றம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டார். ஆயினும், அவர் மீது சுமத்தப்பட்ட இரு குற்றங்களையும் ஹஃபாரிசாம் மறுத்தார்.
முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிடமிருந்து அத்தொகையை பல காசோலைகளாகப் பெற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
முதல் குற்றச்சாட்டில், சட்டவிரோதமான நடவடிக்கையின் வாயிலாக, ஹஃபாரிசாம் 11.5 மில்லியன் ரிங்கிட் பெற்றதாகவும், இரண்டாவது குற்றச்சாட்டில், மீண்டும் அதே சட்டவிரோதமான நடவடிக்கையின் மூலம், 2015-ஆம் ஆண்டு, பிப்ரவரி 12-ஆம் தேதி, 3.5 மில்லியன் ரிங்கிட் பணத்தைப் பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
2001- ஆம் ஆண்டுக்கான பயங்கரவாத நிதியம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ், ஹாஃபாரிசாம் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 15 ஆண்டுகள் வரையிலும் சிறைத் தண்டனையும் மற்றும் பெறப்பட்ட பணத்தை விட ஐந்து மடங்கு அபராதத் தொகையையும் செலுத்த வேண்டியிருக்கும்.