Home இந்தியா “தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்தான் இலக்கு!”- மக்கள் நீதி மய்யம்

“தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்தான் இலக்கு!”- மக்கள் நீதி மய்யம்

633
0
SHARE
Ad

சென்னை: தமிழக சட்டப்பேரவையை இலக்காகக் கொண்டு மக்கள் நீதி மய்யம் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக கட்சியின் நிருவாகிகள் தெரிவித்தனர். மக்களவைத் தேர்தலில் போட்டியிட கமல்ஹாசனுக்கு ஆர்வம் இல்லை என்றும், சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

வருகிற மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக கமல்ஹாசன் அறிவித்து, புதுச்சேரியில் இதற்காக கட்சித் தொடங்கப்பட்டு கொடி அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த கட்சியின் நிருவாகிகள், வருகிற பிப்ரவரி 24-ம் தேதி நெல்லையில் கட்சியின் ஓராண்டு நிறைவு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அக்கூட்டத்தில் 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி வைக்கலாம் எனவும் தெரிவித்தனர். ஆயினும், இது குறித்து கமல்ஹாசன் மட்டுமே முடிவு செய்வார் எனக் கூறினர்.