நியு யார்க்: 1எம்டிபியின் 38 மில்லியன் டாலர் மதிப்புடைய சொத்துகளை பறிமுதல் செய்வதற்காக அமெரிக்க நீதித் துறை புதிய கோரிக்கைய தாக்கல் செய்துள்ளது.
இதுவரையிலும், இந்த வழக்கு சம்பந்தமாக பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளின் மதிப்பு 1.7 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த புதிய வழக்கு, மலேசிய மக்களிடமிருந்து பல பில்லியன் கணக்காண பணத்தை 1எம்டிபி உயர் அதிகாரிகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் திருடி மோசடி செய்துள்ளதன் பேரில் தொடரப்பட்டுள்ளதாக அமெரிக்க வழக்கறிஞர் நிக் ஹன்னா கூறினார்.
கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலும், சுமார் 4.5 பில்லியன் டாலர் பணத்தை 1எம்டிபி அதிகாரிகளும் அவர்களது கூட்டாளிகளும் திருடியிருப்பதாக அமெரிக்க நீதித்துறை குறிப்பிட்டுள்ளது.