Home நாடு “பாஸ், நம்பிக்கைக் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது!”- அன்வார்

“பாஸ், நம்பிக்கைக் கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது!”- அன்வார்

1036
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் மகாதீருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மாணத்தைக் கொண்டு வருவதற்கு நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளுக்குள்ளே கீழறுப்பு வேலைகள் நடக்கிறது என பாஸ் கட்சி திடீரென அறிவித்தது, அக்கூட்டணிக்குள் குழப்பங்களை உண்டுபண்ணுவதற்கே தவிர வேறொன்றும் இல்லை என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.   

கடந்த பொதுத் தேர்தலில் கடுமையாக தோல்வியுற்ற பின்னர், அந்த கட்சியின் கடைசி நடவடிக்கையாக இது அமைகிறது என அவர் கூறினார்.

சில நாட்களுக்கு முன்னர், அவர் மற்ற நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களை சந்தித்ததாகவும், பாஸ் கட்சி கூறுவதை போன்று அவ்வாறான எந்தவொரு நடவடிக்கைகளும் கூட்டணிக்குள் நிலவவில்லை என அன்வார் தெரிவித்தார்.