Home நாடு “11 ஆண்டுகளாக இந்திரா காந்தி மகள் பள்ளிக்கு செல்லவில்லை!”- இங்காட்

“11 ஆண்டுகளாக இந்திரா காந்தி மகள் பள்ளிக்கு செல்லவில்லை!”- இங்காட்

1144
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை நடைபெற இருக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்புக் கூட்டத்தில், இந்திரா காந்தி அதிரடி அணி (இங்காட்) எனும் அமைப்பு, அதிர்ச்சியூட்டும் சில தகவல்களை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது.

நேற்று, மலேசியா கினியிடம் பேசிய அதன் தலைவர், அருண் துரைசாமி, இந்திரா காந்தியின் குழந்தை பிரசன்ன டிக்ஸாவைப் பற்றிய தகவலாக அது இருக்கும் என தெரிவித்தார்.

நாங்கள் பெற்ற தகவல்களின் அடிப்படையில் 11 வருடங்களாக பிரசன்ன எந்த பள்ளிக்கும் செல்லவில்லை. ஒருபோதும் பள்ளிக்கு சென்றதில்லைஎன உறுதியுடன் அருண் கூறினார்.

#TamilSchoolmychoice

அவர் இன்னும் உயிருடன் இருக்கிறாரா எனும் கேள்விகளும் எங்களுக்கு உண்டு”  என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிரசன்ன குழந்தையாக இருக்கும் போது அவரது தந்தையான,  முகமட் ரிதுவான் அப்துல்லா, இந்திராவின் கண்காணிப்பில் இருந்து கடத்திக் கொண்டு போனது குறிப்பிடத்தக்கது.