Home உலகம் “இந்தியா- பாகிஸ்தான் போர் அபாயம் உச்சக்கட்டம்!”- டிரம்ப்

“இந்தியா- பாகிஸ்தான் போர் அபாயம் உச்சக்கட்டம்!”- டிரம்ப்

930
0
SHARE
Ad

வாசிங்டன்: காஷ்மீரில் இந்தியப் படைகளுக்கு எதிரான கொடியத் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில்ஆபத்தான சூழ்நிலைநிலவுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான ஆபத்தான நிலைமை இது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன” என்று டிரம்ப் நேற்று வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் கூறினார்.

கடந்த வாரம் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 44 இந்திய வீரர்கள் வீரமரணமுற்றனர். கடந்த 30 ஆண்டுகளில் ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிக்காரர்களால் நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

பாகிஸ்தானில் இயங்கி வரும், ஆயுதமேந்திய போராளிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் குறிப்பிட்டிருந்தார். 

பாகிஸ்தானைத் தளமாகக் கொண்டு இயங்கி வரும் ஜய்ஷ்முகமட் தீவிரவாத அமைப்பு, இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருந்தது.

இந்தியாவின் எந்தவொரு தவறான முடிவுக்கும், பாகிஸ்தான் பதிலடிக் கொடுக்கத் தயாராக உள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.