Home உலகம் ஜப்பானில் கடலுக்கடியில் கடும் நிலநடுக்கம்- மக்கள் அதிர்ச்சி

ஜப்பானில் கடலுக்கடியில் கடும் நிலநடுக்கம்- மக்கள் அதிர்ச்சி

635
0
SHARE
Ad

jepunமியாகோ, ஏப்ரல் 2- ஜப்பானின் மியாகோ பகுதியிலிருந்து கிழக்கே 107 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள கடலுக்கடியில் நேற்று திடீரென்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்திய நேரப்படி இரவு 12 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

கடலுக்கடியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு வழங்கவில்லை. மேலும் நிலநடுக்கத்தால் உயிர் இழப்புகளோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.