Home நாடு மத விரோத குற்றச்சாட்டை எதிர்த்து டோமி தோமஸ் காவல் துறையில் புகார்!

மத விரோத குற்றச்சாட்டை எதிர்த்து டோமி தோமஸ் காவல் துறையில் புகார்!

1051
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இஸ்லாமிய மதத்திற்கு எதிராக தாம் செயல்படுவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் இன்று புதன்கிழமை காவல் துறையில் புகார் செய்தார். விரோத உணர்வை ஏற்படுத்தும் வகையில் அக்கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பரவிக் கிடக்கும் பல்வேறு செய்திகளில், அவர் இஸ்லாமிய மதத்திற்கு எதிரானவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.

முன்னதாக, ஒரு சில அம்னோ மற்றும் பாஸ் தலைவர்கள், இஸ்லாமிய மதத்தினை அவமதித்தவர்களுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகளை எடுக்காததை சுட்டிக் காட்டி டோமியைக் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.