Home நாடு “பாஸ், கிளேருக்கு பணம் கொடுத்த ஆதாரம் என்னிடம் உண்டு”!- அன்வார்

“பாஸ், கிளேருக்கு பணம் கொடுத்த ஆதாரம் என்னிடம் உண்டு”!- அன்வார்

689
0
SHARE
Ad

செமினி: பிரிட்டன் பத்திரிக்கையாளர் கிளேர் ரியூகாஸல் பிராவுனுக்கு (Clare Rewcastle Brown), பாஸ் கட்சி பணம் கொடுத்த ஆதாரம் தம்மிடம் இருப்பதாக பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

முன்னதாக, பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கின் மீது, கிளேர் அவதூறு வழக்கு தொடுத்திருந்தார். பின்பு, அது நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணப்பட்டுவிட்டது என சரவாக் ரிப்போர்ட் ஆசரியருமான கிளேர் ரியூகாஸல் தெரிவித்தார்.

இந்த வழக்கில், கிளேருக்கு பாஸ் கட்சி பணம் கொடுத்து, அவ்வழக்கினை ஒன்றுமில்லாமல் செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அனவார், இதற்காக பாஸ் கட்சி பணம் கொடுத்துள்ளதை பகிரங்கமாக வெளியிட்டார். அதனை செமினி சட்டமன்ற இடைத் தேர்தலின் பிரச்சாரக் கூட்டத்தில் வெளியிடப்போவதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும், இன்று செமினியில் நடைபெற இருக்கும் பிரச்சாரக் கூட்டதில் மேலும் பல விவகாரங்களை தாம் வெளியிடப்போவதாகவும் அன்வார் நேற்று (புதன்கிழமை) தெரிவித்தார்.