Home கலை உலகம் கமல்ஹாசன், ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு இசையமைக்கும் அனிருத்!

கமல்ஹாசன், ரஜினிகாந்த் திரைப்படத்திற்கு இசையமைக்கும் அனிருத்!

909
0
SHARE
Ad

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ மற்றும் இயக்குனர் முருகதாஸ்சின் ரஜினிகாந்த் படத்தில் இசையமைக்க, இசையமைப்பாளர் அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் வாயிலாக, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோரின் படங்களுக்கு அடுத்தடுத்து இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைத்துள்ளது.

சமீபக் காலமாக தமிழ் திரைப்படங்களில் சிறந்த ஓர் இசையை வழங்கி வரும் அனிருத்துக்கு, பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக இருந்தாலும், இவ்விரு திரைப்படங்களும் அவருக்கு  கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பாகவேக் கருதப்படுகிறது.

ரஜினிகாந்தின் நெருங்கிய உறவினர் என்பதால், ‘பேட்ட’ திரைப்படத்தில் இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்துக்கு கிடைத்தது.  அதன் பின்பு இந்தியன் 2 படத்திற்கும் இசையமைக்க அனிருத் ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

#TamilSchoolmychoice

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் படத்திற்கும் அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.