Home நாடு பாஸ்: மில்லியன் கணக்கான பணம், ஆடம்பர கார்கள், சொத்துக்கள் பறிமுதல்!- எம்ஏசிசி

பாஸ்: மில்லியன் கணக்கான பணம், ஆடம்பர கார்கள், சொத்துக்கள் பறிமுதல்!- எம்ஏசிசி

777
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாஸ் கட்சித் தலைவர்கள் சம்பந்தப்பட்ட 90 மில்லியன் ரிங்கிட் நிதி மோசடி வழக்கு விசாரணையில் இதுவரையிலும் தாங்கள் மில்லியன் கணக்கான பணம், ஆடம்பர கார்கள் மற்றும் சொத்துக்களை கைப்பற்றி உள்ளதாக ஊழல் தடுப்பு ஆணைய வட்டாரம் குறிப்பிட்டதாக, மலேசிய கினி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளர் தாக்கியூடின் ஹசான் விசாரணைக்காக ஊழல் தடுப்பு ஆணைத்திற்கு அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாளை வெள்ளிக்கிழமை, மேலும் பல பாஸ் கட்சித் தலைவர்கள் விசாரணைக்காக அழைக்கப்படுவர் என ஊழல் தடுப்பு ஆணைய வட்டாரம் தகவல் தெரிவித்ததாக மலேசிய கினி குறிப்பிட்டிருந்தது.

#TamilSchoolmychoice

டொயோட்டா வெல்பையர், ரேஞ்ச் ரோவர் மற்றும் மினி கூப்பர் போன்ற ஆடம்பர கார்கள் கைப்பற்றப்பட்டன என வட்டாரம் தெரிவித்தது.

2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கடை வீடொன்றும், 2.3 மில்லியன் ரிங்கிட் வங்கி கணக்குகளும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.