Home வணிகம்/தொழில் நுட்பம் 7-லெவன் கடைகள் இந்தியாவில் திறக்கப்படுகின்றன

7-லெவன் கடைகள் இந்தியாவில் திறக்கப்படுகின்றன

924
0
SHARE
Ad

புதுடில்லி – மலேசியாவில் பிரபலமான 24-மணி நேரக் கடைகளான 7-லெவன் மையங்கள் இந்தியாவில் திறக்கப்படுகின்றன.

பியூச்சர் ரிடேய்ல் (Future Retail) என்ற இந்திய நிறுவனம் 7-லெவன் உரிமத்தைக் கொண்டுள்ள அமெரிக்க நிறுவனத்திடமிருந்து, இந்தியாவில் 7-லெவன் கடைகளைத் திறக்கும் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறது.

பியூச்சர் ரிடேய்ல் நிறுவனம் ஏற்கனவே, பிக் பசார், நீல்கிரிஸ், ஃபுட்ஹாட் (Foodhall) சில்லறை வணிகக் கடைகளையும், அங்காடிகளையும் இந்தியாவில் நடத்தி வருகின்றது.

#TamilSchoolmychoice

7 லெவன் நிறுவனத்துடனான உடன்பாட்டைத் தொடர்ந்து இந்தியாவில் புதிய கடைகளைத் திறக்க உத்தேசித்திருப்பதாகவும், ஏற்கனவே இயங்கி வரும் சில கடைகளை 7-லெவன் வணிக முத்திரையுடன் நடத்தவிருப்பதாகவும் அறிவித்துள்ளது.