கோலாலம்பூர் – கோலாலம்பூர் மாநகரசபையின் சார்பில் தொடங்கப்பட்ட இலவச பேருந்து சேவையான கோ-கேஎல் என்ற பெயர் கொண்ட சேவை நேற்று வியாழக்கிழமை தனது 5-வது வழித்தடத்துக்கான சேவையைத் தொடக்கியது.
10.4 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்ட இந்த வழித் தடம் ஆரஞ்சு வண்ணத் தடமாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. தித்திவாங்சா தொடங்கி ஜாலான் பகாங் வரையிலான சாலைகளில் இயங்கவிருக்கும் இந்த இலவச பேருந்து சேவை பொதுமக்களுக்கு பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய இலவச பேருந்து சேவையின் பாதைகளை மேலே காணப்படும் வரைபடம் காட்டுகிறது.