Home நாடு செமினி: “நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு உயர்ந்துள்ளது!”- மொகிதின்

செமினி: “நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவு உயர்ந்துள்ளது!”- மொகிதின்

738
0
SHARE
Ad

செமினி: நாளை சனிக்கிழமை (மார்ச் 2) செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் நடக்க இருக்கும் வேளையில், நம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவாக வாக்களர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.

கட்சி வேட்பாளரும், தேர்தல் இயந்திரக் குழுவும் அயராது உழைத்ததன் காரணமாகக் கட்சிக்கு வாக்காளர்களின் ஆதரவு உயர்ந்துள்ளது என அவர் தெரிவித்தார். மேலும், நம்பிக்கைக் கூட்டணியின் ஒரு சில முக்கியத் தலைவர்கள் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்ததும் இந்த மாறுதலுக்கு வித்திட்டது என அவர் கூறினார்.

நாளை சனிக்கிழமை செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில் அனைத்து வேட்பாளர்களும் தீவிரமான பிரச்சாரத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.