Home உலகம் “ஜய்ஷ்-இ-முகமட் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருக்கிறார்!”- குரேஷி

“ஜய்ஷ்-இ-முகமட் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில் இருக்கிறார்!”- குரேஷி

791
0
SHARE
Ad

இஸ்லாமாபாத்: ஜய்ஷ்முகமட் அமைப்பின் தலைவர் மசூத் அசார் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்பதை அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூட் குரேஷி ஒப்புக்கொண்டார். மேலும், அவர் கூறியதாவது, அசாருக்கு தற்போது உடல் நலம் குன்றி போயிருப்பதாகவும், வீட்டை விட்டு வெளியே வர இயலாத நிலைமையில் இருப்பதாகவும் அவருக்கு தகவல் கிடைத்துள்ளதாகக் கூறினார்.

இந்தியாவில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கும், அசாருக்கும் சம்பந்தம் இருந்தால், பாகிஸ்தான் நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில், அது சம்பந்தமான ஆதாரங்களை இந்தியா பாகிஸ்தானிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

கடந்த மாதம், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் இந்தியாவின் சிஆர்பிஎப் படையினர் சென்று கொண்டிருந்த வாகனத்தில், தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டதால் அதிலிருந்த 44 இந்திய படையினர் பலியாயினர்.

#TamilSchoolmychoice

இந்த தாக்குதலை நடத்துவதற்கு மூளையாக செயல்பட்ட மசூத் அசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாகிஸ்தானை இந்தியா கேட்டு வந்தது, ஆயினும், ஆதாரப்பூர்வமாக அந்த குற்றச்சாட்டை நிரூபிக்கக்கோரி பாகிஸ்தான் இந்தியாவை கேட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.