Home நாடு “டோமி தோமஸ் கம்யூனிச சிந்தனையைக் கொண்டவர்!”- லொக்மான்

“டோமி தோமஸ் கம்யூனிச சிந்தனையைக் கொண்டவர்!”- லொக்மான்

913
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ், மலாயா கம்யூனிசக் கட்சியின் தலைமைச் செயலாளர் சின் பெங்கிற்கு வழக்கறிஞராகப் பணியாற்றியவர் என்றும் அதனால் அவர் அப்பதவிக்கு ஏற்றவர் இல்லை என்றும் அம்னோ கட்சியின் உச்சக்குழு உறுப்பினர் லொக்மான் அடாம் கூறினார்.

இஸ்லாமிய மதத்திற்கு எதிரான சித்தாந்தங்களைக் கொண்டது கம்யூனிசக் கட்சி. நேற்று (வெள்ளிக்கிழமை), செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சுமார் 400 பேர் முன்னிலையில் பேசிய லோகமான், டோமி கம்யூனீச சிந்தனையைக் கொண்டிருந்ததால்தான் அண்ணல் நபியை அவமதித்தவர்கள் மீது தாமதமாக நடவடிக்கை எடுத்தார் எனக் கூறினார்.

முன்னதாக, தாம் இஸ்லாமிய மதத்திற்கு எதிரானவர் என சமூக ஊடகங்களில் பதிவிட்டவர்கள் மீது டோமி தோமஸ் காவல் துறையில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.