“மலாய் மற்றும் பூமிபுத்ரா சமூகத்தினருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, இனி தைரியமாக செயல்படுத்த வழிகளைக் கண்டறிவோம்” என அவர் கூறினார்.
நம்பிக்கைக் கூட்டணி அரசுக்கு மக்கள் விடுத்த கடும் எச்சரிக்கையாக இந்த இடைத் தேர்தல் அமைகிறது என அவர் தெரிவித்தார். மக்களின் தேவைகளையும் பிரச்சனைகளையும் செயல்படுத்துவதற்கான காலக்கட்டம் இது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
“மக்களுடைய பொருளாதார சுமையை சீராக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க திட்டங்களை தீட்டும்” என அமைச்சர் கூறினார்.
கடந்த சனிக்கிழமை (மார்ச் 2) நடைபெற்ற செமினி சட்டமன்ற இடைத் தேர்தலில் தேசிய முன்னணி 1,914 பெரும்பான்மை வாக்குகளில் நம்பிக்கைக் கூட்டணியை வெற்றிக் கொண்டது. கடந்த 14-வது பொதுத் தேர்தலில், 8,964 பெரும்பான்மை வாக்குகளில் நம்பிக்கைக் கூட்டணி அந்த சட்டமன்றத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.