Home நாடு மஇகா ராசா தொகுதியின் முன்னாள் தலைவர் ஜி.எம்.கண்ணன் கார் விபத்தில் காலமானார்

மஇகா ராசா தொகுதியின் முன்னாள் தலைவர் ஜி.எம்.கண்ணன் கார் விபத்தில் காலமானார்

924
0
SHARE
Ad

சிரம்பான் – நெகிரி செம்பிலான் மாநிலத்தின் மஇகா பிரமுகர்களில் ஒருவரும், மஇகா ராசா தொகுதியின் முன்னாள் தலைவருமான டத்தோ ஜி.எம்.கண்ணன் (படம்) இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கார் விபத்தொன்றில் காலமானார்.

ஜாலான் ராசா ஜெயாவில் கண்ணன் பயணம் செய்து கொண்டிருந்த கார் சாலையிலிருந்து வழுக்கி மரம் ஒன்றில் இன்று பிற்பகல் மோதியதில் அவர் காலமானார்.

79 வயதான கண்ணன் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்கள் காரணமாக விபத்து நடந்த இடத்திலேயே மரணமடைந்தார் என காவல் துறையினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

#TamilSchoolmychoice

பின்னர் கண்ணனின் நல்லுடல் துவாங்கு ஜபார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.