Home நாடு வல்லினத்தின் நாவல் இலக்கியம் & யாழ் ஆசிரியர்களுக்கான சிறுகதைப்போட்டி பரிசளிப்பு

வல்லினத்தின் நாவல் இலக்கியம் & யாழ் ஆசிரியர்களுக்கான சிறுகதைப்போட்டி பரிசளிப்பு

1345
0
SHARE
Ad

கோலாலம்பூர் – 2019-இல் வல்லினத்தின் முதல் நிகழ்ச்சியானது எதிர்வரும் 31.3.2019 இல் நடைபெறவிருக்கின்றது. ‘நாவல் இலக்கியம்’ எனும் தலைப்பில் இம்முதல் நிகழ்ச்சி நடைவெறவுள்ளது.

அமர்வு 1:

நாவல் அறிமுகமும் விமர்சனமும்

#TamilSchoolmychoice

இந்த அமர்வில் வல்லினம் பதிப்பில் வெளியீடு கண்ட ரிங்கிட் (அ.பாண்டியன்), மிச்சமிருப்பவர்கள் (செல்வன் காசிலிங்கம்), மற்றும் கிழக்கு பதிப்பில் வெளிவந்திருக்கும் மலைக்காடு (சீ.முத்துசாமி) ஆகிய நாவல்கள் குறித்த கருத்துரைகளும் விமர்சனங்களும் படைக்கப்படும்.

‘ரிங்கிட்’ நாவல் குறித்து ஶ்ரீதர் ரங்கராஜ், ‘மிச்சமிருப்பவர்கள்’ குறித்து கலை சேகர் மற்றும் ‘மலைக்காடு’ குறித்து இமையம் ஆகியோர் உரையாற்றுவர். மலேசியாவில் எழுதப்பட்ட மூன்று நாவல்களைப் பரவலான அறிமுகத்திற்கு எடுத்துச்செல்வதே இவ்வரங்கின் நோக்கம்.

அமர்வு 2:
உலக இலக்கிய அறிமுகம் – 1

வல்லினம் இவ்வாண்டு தொடச்சியாக உலக இலக்கியம் குறித்த அறிமுகத்தை நாடு முழுவதும் நடத்த முடிவெடுத்துள்ளது. அதன் முதல் அமர்வாக செர்பிய-க்ரவோஷிய மொழியில் மிலோராத் பாவிச் எழுதிய கசார்களின் அகராதி நாவலை மொழிப்பெயர்த்த ஶ்ரீதர் ரங்கராஜ் அந்நாவலின் உள்ளடக்கம் குறித்தும் அதன் வாசிப்பு அனுபவம் குறித்தும் வாசகர்களிடம் பகிர்ந்துகொள்வார். இதன் வழி அந்நாவலை வாசிக்கும் ஆர்வமும் உள்வாங்கும் ஆற்றலும் வாசகர்களுக்கு உருவாகும்.

அமர்வு 3:
யாழ் ஆசிரியர்களுக்கான சிறுகதை போட்டி பரிசளிப்பு

யாழ் பதிப்பகம் ஏற்பாடு செய்திருந்த சிறுகதை போட்டியில் வெற்றிபெற்ற எழுத்தாளர்களுக்கான பரிசளிப்பும் சிறுகதைகள் குறித்த விமர்சன அரங்கும் இடம்பெறும். இவ்வரங்கை சு.வேணுகோபால் அவர்கள் வழிநடத்துவார். அதிகபட்சம் தரமான 10 சிறுகதைகளுக்கு தலா 1000 ரிங்கிட் வழங்க இத்திட்டம் வகுக்கப்பட்டது. அவ்வகையில் எத்தனை சிறுகதைகள் தேர்வு பெற்றுள்ளன என்ற தகவலும் முடிவும் நிகழ்ச்சியின் அன்றே அறிவிக்கப்படும்.

நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள்:

கீழ்க்கண்ட கூகுள் பாரத்தில் உங்கள் வருகையை உறுதி செய்யவும்.

https://goo.gl/forms/5FDIheIinFOixLqp2

இந்நிகழ்ச்சி 100 பேருக்கு மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே முன்பதிவு அவசியம்.
நிகழ்ச்சி சரியாக இரண்டு மணிக்குத் தொடங்கும்.

1.00 – 1.45 வரை உணவு வழங்கப்படும்.

2.30 மணிக்குப் பின் நிகழ்ச்சிக்கு வருபவர்கள் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
நிகழ்ச்சியில் கலந்துரையாடப்படும் அனைத்து நாவல்களும் விற்பனைக்கு மலிவு விலையில் வைக்கப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு உரைக்குப் பிறகும் வாசகர்கள் தங்கள் கருத்தைக்கூற நேரம் ஒதுக்கப்படும்.

யாழ் சிறுகதைப் போட்டி பரிசளிப்பில் கலந்துகொள்ள முடியாத வெற்றியாளர்களுக்கு பரிசுத்தொகை வங்கியில் செலுத்தப்படும்.

அனைத்துத் தொடர்புகளுக்கும் ம.நவீன் 016-3194522