Home நாடு ரந்தாவ்: மார்ச் 9-இல் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு!

ரந்தாவ்: மார்ச் 9-இல் நம்பிக்கைக் கூட்டணி வேட்பாளர் அறிவிப்பு!

777
0
SHARE
Ad
சைபுடின் நசுத்தியோன் – பிகேஆர் தலைமைச் செயலாளர்

கோலாலம்பூர்: செமினி சட்டமன்ற இடைத் தேர்தலை அடுத்து ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்ற இரு இடைத் தேர்தல்களில் நம்பிக்கைக் கூட்டணி தோல்வியை அடைந்துள்ள நிலையில், அந்தக் கூட்டணி இம்முறை கடுமையாக உழைக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மக்களிடையே ஆளும் கட்சியின் மீதுள்ள அதிருப்தி, அம்னோ- பாஸ் கட்சிகளின் ஒத்துழைப்பு போன்றவை அக்கூட்டணியின் தோல்விக்கு வித்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.    

இதற்கிடையே, ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியைப் பிரதிநிதித்து போட்டியிட இருக்கும் வேட்பாளர் குறித்த விபரங்கள் மார்ச் 9-ஆம் தேதி அறிவிக்கப்படும் என பி.கே.ஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.      

தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து, அத்தொகுதியை தற்போதை அம்னோ கட்சியின் இடைக்காலத் தலைவர் முகமட் ஹசான் போட்டியிடுவர் என தகவல்கள் வெளியிடப்பட்டாலும், இந்திய மக்களிடம் மஇகா ஏன் அந்த சட்டமன்றத்தில் போட்டியிடக் கூடாது எனும் கேள்விகள் எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

முன்னதாக, கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி, மஇகா வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த இடைத் தேர்தலின் போது அத்தொகுதி பூர்வக்குடி சமூகத்தைச் சார்ந்த வேட்பாளருக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது.