Home நாடு “குறைந்தபட்ச ஊதிய திட்ட விவகாரத்தில் அமைச்சருக்கு அதிகாரம் இல்லை!”- குலசேகரன்

“குறைந்தபட்ச ஊதிய திட்ட விவகாரத்தில் அமைச்சருக்கு அதிகாரம் இல்லை!”- குலசேகரன்

786
0
SHARE
Ad

கோலாலம்பூர்: குறிப்பிட்ட தொழில்துறைகளுக்கு குறைந்தபட்ச ஊதிய திட்டத்தினை கூடிய விரைவில் செயல்படுத்த முடியாது எனவும், அதனை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு மேலும் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் எனவும் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் தெரிவித்தார்.

இச்செய்தி வெளிவந்த அடுத்த நொடியே, மக்கள் தங்களின் அதிருப்திகளை சமூகப் பக்கங்களில் பரவலாக பதிவிட்டு வந்தனர். சமீபக்காலமாக, நம்பிக்கைக் கூட்டணி அரசின் மீது மக்கள் அதிருப்தி அடைந்து வரும் நிலையில் தற்போது, மீண்டும் இவ்வகையான செய்திகள், நம்பிக்கைக் கூட்டணி மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பாதிப்பதாக உள்ளது என மக்கள் கூறி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் அமைச்சருக்கு அதிகாரம் கிடையாது என்றும், இந்த ஊதிய சம்பந்தமான விவகாரங்களுக்கான தீர்வுகளை தீர்மானிப்பதற்காக தேசிய ஊதியம் சட்ட தொழில்நுட்பக் குழு உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.