Home வணிகம்/தொழில் நுட்பம் பேரா மாநில இந்தியர் வர்த்தக சபை தேர்தலில் கேசவன் போட்டியின்றி வெற்றி பெற்றார்

பேரா மாநில இந்தியர் வர்த்தக சபை தேர்தலில் கேசவன் போட்டியின்றி வெற்றி பெற்றார்

595
0
SHARE
Ad

indian-commerceஈப்போ, ஏப்ரல் 2- பேரா மாநில இந்தியர் வர்த்தக சபை தலைவராக அதன் நடப்புத் தலைவர் எம்.கேசவன் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

அதன் தலைவராக இருந்து வந்த சுல்தான் அப்துல் காதரின் நான்கு ஆண்டு கால பதவிக் காலம் முடிவடைந்ததால் அதன் புதிய பொறுப்பாளர்கள் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு எம்.கேசவன் முன்மொழியப்பட்டார். போட்டிக்கு வேறு யாரும் முன் மொழியப்படவில்லை. இதனிடையே இதர பொறுப்புகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. அதில் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

#TamilSchoolmychoice

wisma-piccதேர்தலில் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.கேசவன் செய்தியாளர்களிடம் பேசிய போது, வர்த்தக சபையின் வளர்ச்சிக்கு மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி, இரண்டாவது நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ உஸ்னி, டத்தோ வீரசிங்கம் உட்பட பிரமுகர்கள், வர்த்தகர்கள் மற்றும் பேரதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மேலும், சபையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய அதன் முன்னாள் தலைவர் சுல்தான் அப்துல் காதிர் மற்றும் அதன் நிர்வாக உறுப்பினர்களின் சேவையும் நினைவு கூர்ந்தார். இம்மாநிலத்தில் பல ஆண்டு காலமாக செயல்பட்டு வரும் மாநில இந்தியர் வர்த்தக சபை தற்பொழுது புதிய கட்டடத்தை பெற்றுள்ளது. மேரு ராயாவில் மாநில அரசாங்கத்திடம் இருந்து நில ஒதுக்கீட்டை பெற்றுள்ளது. அங்கு கலாச்சார மையம் அமைப்பது உட்பட பல திட்டங்கள் வரையப்பட்டு வருகின்றன.

அத்துடன் சிம்பாங் பூலாயில் 38 ஏக்கர் நிலத்தையும் இந்த வர்த்தக சபை பெற்றுள்ளது. இந்திய வணிகர்களுக்கு தொழில் துறையை தொடங்க அவர்களுக்கு குறைந்த விலையில் இந்த நிலங்களை விற்கப்படும் என்று மேலும் சொன்னார்.