Home இந்தியா இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல்!

இந்திய நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல்!

735
0
SHARE
Ad

காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் இராணுவம் அத்து மீறி நேற்று திங்கட்கிழமை அதிகாலையில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, அக்னூர் எனப்படும், இந்திய எல்லைப் பகுதியில் இந்திய நிலைகள் மற்றும் கிராமங்கள் மீது பாகிஸ்தான் இராணுவம் நேற்று அதிகாலை 3.00 மணிக்கு தாக்குதல் நடத்தியதாகக் கூறினார்.

இதற்கு இந்திய இராணுவம் தக்க பதிலடி கொடுத்தது எனவும் அவர் குறிப்பிட்டார். காலை 6.30 மணி அளவில் இந்த சண்டை ஓய்ந்தது என அவர் தெரிவித்தார். இந்திய தரப்பில் இந்த சம்பத்தின் போது எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார். இதனிடையே, நேற்று பாகிஸ்தானிய உளவு விமானத்தை இந்திய தரப்பு சுட்டு வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.