Home நாடு தேமு சந்திப்புக் கூட்டத்தில் நஸ்ரி கலந்து கொண்டால், மஇகா- மசீச பங்கேற்காது!

தேமு சந்திப்புக் கூட்டத்தில் நஸ்ரி கலந்து கொண்டால், மஇகா- மசீச பங்கேற்காது!

1320
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருகிற வெள்ளிக்கிழமை நடைபெற இருக்கும் தேசிய முன்னணியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு, நஸ்ரி அஜிஸ் கலந்து கொண்டால், மஇகா மற்றும் மசீச அக்கூட்டத்தில் இடம்பெறாது என அறிக்கையின் மூலம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.

மசீச மற்றும் மஇகா தலைவர்கள் வழங்கிய கூட்டறிக்கையில், தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளராக நஸ்ரி அஜிஸ்சின் நியமனம் அரசியலமைப்பிற்கு முரணானது என வலியுறுத்தி உள்ளன.

நஸ்ரியின் நியமனம் குறித்து ஒரு போதும் உச்சமன்றக் குழுவில் கலந்தாலோசிக்கவில்லை என்றும், அது குறித்த ஒப்புதலும் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தன. கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற்ற மஇகா பொதுக் கூட்டத்தின் போது, தேசிய முன்னணி தலைவர் சாஹிட் ஹமிடி இந்த நியமனம் குறித்து அறிவித்ததாக அவ்விரு கட்சிகளும் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான நஸ்ரி, மஇகா மற்றும் மசீச கட்சிகளை வேண்டுமனே மட்டம் தட்டிப்பேசுவதும், குறைக் கூறுவதையும் வழக்கமாக்கிக் கொண்டுள்ளதாக அந்தக் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தலைமைச் செயலாளர் என்ற பதவியை பயன்படுத்திக் கொண்டு தேவையற்ற சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருவதாகவும் அவை தெரிவித்தன.