Home இந்தியா “ஏகே 203 துப்பாக்கிகள் இந்தியாவில் தயாராகும்!”- புதின்

“ஏகே 203 துப்பாக்கிகள் இந்தியாவில் தயாராகும்!”- புதின்

933
0
SHARE
Ad

புது டில்லி: இந்திய- பாகிஸ்தான் எல்லைப் பிரச்சனை உச்சத்தை அடைந்து வரும் நிலையில், ரஷ்ய நாட்டின் காப்புரிமையைப் பெற்ற ஏகே 203 ரக இயந்திரத் துப்பாக்கிகள், இனி இந்தியாவிலும் தயாரிக்கப்படுவதற்கான ஒப்பந்தம் நேற்று திங்கட்கிழமை கையெழுத்தானது. இந்த துப்பாக்கிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவுமென ரஷ்ய அதிபர் புதின் கடிதத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

ஏகே 47 ரக துப்பாக்கிகளின் மேம்படுத்தப்பட்ட வடிவமானதுதான் ஏகே 203 ரக துப்பாக்கிகள். இந்த ஒப்பந்தத்தின்படி, 7.5 லட்சம் ஏகே 203 ரக துப்பாக்கிகள், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள போர் தளவாட தொழிற்சாலையில் தயாரிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இம்மாதிரியான ஆயுதங்களால் நாட்டின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.