Home வணிகம்/தொழில் நுட்பம் அமெரிக்கா: ‘கோப்பா’ சட்டத்தின் கீழ் டிக் டாக் செயலிக்கு 5.7 மில்லியன் டாலர் அபராதம்!

அமெரிக்கா: ‘கோப்பா’ சட்டத்தின் கீழ் டிக் டாக் செயலிக்கு 5.7 மில்லியன் டாலர் அபராதம்!

769
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்க குழந்தைகள் இணைய தனியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் (கோப்பா) கீழ் டிக் டாக் நிறுவனத்திற்கு 5.7 மில்லியன் டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

13 வயதுக்குக் குறைவான குழந்தைகள், அனைத்து விதமான செயலிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னதாக, பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டியது அமெரிக்கச் சட்டத்தின்படி அவசியமாகிறது. ஆயினும், அந்தச் சட்டத்தினை டிக் டாக் நிறுவனம் கடைபிடிக்கவில்லை.

குழந்தைகளின் பெயர்கள், மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களை அக்குழந்தைகளின் பெற்றோர்களின் அனுமதியின்றி டிக் டாக் பெற்றுள்ளது.

#TamilSchoolmychoice

இம்மாதிரியான நடவடிக்கைகள் குழந்தைகளைக் குறிவைத்து செயல்படுத்தப்படும் அனைத்து விதமான இணையச் சேவைகளுக்கும், இணையதளங்களுக்கும் ஓர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அமெரிக்க வர்த்தக ஆணையம் தெரிவித்துள்ளது.