Home உலகம் மசூத் அசார் சகோதரர், மகன் உட்பட 44 பேர்  கைது!

மசூத் அசார் சகோதரர், மகன் உட்பட 44 பேர்  கைது!

969
0
SHARE
Ad

இஸ்லாமாபாத்: இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்நிலையில் மசூத் அசாரின் சகோதரர் முப்தி அப்துல் ராவுப், மகன் ஹமத் அசார் உள்ளிட்ட 44 பேரை, நேற்று (செவ்வாய்க்கிழமை) பாகிஸ்தான் கைது செய்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு தெரிவித்தது.

தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மீதான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் எனும் அடிப்படையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின், கண்காணிப்பில் இருக்கும் 44 பேர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளது

மேலும், மசூத் அசாரைக் கைது செய்வது பற்றி அடுத்த 24 மணி நேரத்தில் பிரதமர் இம்ரான் கான் முடிவெடுப்பார் எனவும் கூறப்படுகிறது. ஆயினும், இது குறித்த அதிகாரப்பூர்வ செய்திகள் ஏதும் பெறப்படவில்லை.