இதற்கிடையே, நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தொகுதி பங்கீடு முடிவடைந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகளுக்கு இரண்டு தொகுதிகளும், இரண்டு இடதுசாரி கட்சிகளுக்கும் தலா இரண்டு தொகுதிகளும், இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு தொகுதியும், கொங்கு நாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதியும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மதிமுகவுக்கு மக்களவையில் ஒரு தொகுதியும், மாநிலங்களவையில் ஒரு தொகுதியும் கொடுக்கப்பட்டுள்ளது.