Home நாடு ரந்தாவில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றிப் பெறும் வாய்ப்புகள் அதிகம்!

ரந்தாவில் நம்பிக்கைக் கூட்டணி வெற்றிப் பெறும் வாய்ப்புகள் அதிகம்!

1107
0
SHARE
Ad

சிரம்பான்: வருகிற ஏப்ரல் 13-ஆம் தேதி நடைபெற இருக்கும், ரந்தாவ் சட்டமன்ற இடைத் தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணிக்கு வெற்றிப் பெறும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில நம்பிக்கைக் கூட்டணித் தலைவர் டத்தோஶ்ரீ அமினுடின் ஹருன் தெரிவித்தார்.

இப்பகுதியில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையும், செமினியில் உள்ள மக்கள் தொகைக்கும் வேறுபாடுகள் உள்ளன என அவர் விளக்கினார்.

வெற்றிப் பெறும் வேட்பாளரை அடையாளம் கண்டு வருகிறோம் என்றும், மேலும், அம்னோவிடமிருந்து இந்த சட்டமன்றத்தை கைப்பற்ற சரியான வியூகங்களை திட்டம் தீட்டி வருவதாகவும் அவர் கூறினார்.