இவர் முதன் முறையாக நடிகர் நாகேஷ் மூலமாக நாடகக் குழுவில் சேர்ந்து, பின்னர் 1959-ஆல் ‘நெஞ்சே நீ வாழ்க’ என்னும் நாடகத்தில் டைப்பிஸ்ட்டாக நடித்திருந்தார். அந்த நாடகம் இரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றக் காரணத்தினால், அவரது இயற்பெயரான கோபாலரத்தினத்திற்குப் பதிலாக ‘டைப்பிஸ்ட் கோபு’ என திரைப்படங்களில் அவர் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
மேலும், அக்காலத்தில் தமிழ் திரைப்படங்களின் முக்கிய நடிகர்களான சிவாஜி, எம்ஜிஆர் ஆகியோருடன் இணைந்து நடித்த பெருமை இவருக்கு உண்டு. 2002-ஆம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது.
பொருளாதார ரீதியாக மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து வந்த இவருக்கு, சில சினிமா நட்சத்திரங்கள் பண உதவிகள் செய்து வந்துள்ளனர். மேலும், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக உதவித் தொகை வழங்கப்பட்டு வந்ததுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் தமிழ் திரைப்படங்களில் நடித்து வந்த டைப்பிஸ்ட் கோபு, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.