Home நாடு “அம்னோ-பாஸ் கூட்டணியால் நம்பிக்கைக் கூட்டணி தளர்ந்து விடக்கூடாது!”- அம்பிகா

“அம்னோ-பாஸ் கூட்டணியால் நம்பிக்கைக் கூட்டணி தளர்ந்து விடக்கூடாது!”- அம்பிகா

787
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ- பாஸ் கூட்டணியால், இரு இடைத் தேர்தல்களில் வேறுபட்ட முடிவுகளை அடைந்ததைக் கண்டு நம்பிக்கைக் கூட்டணி, அதன் முக்கியக் குறிக்கோளிலிருந்து வழி மாறிவிடக் கூடாது என முன்னாள் வழக்கறிஞர்கள் மன்றத்தின் தலைவர் அம்பிகா ஶ்ரீநிவாசன் தெரிவித்தார்.

மக்களின் பொருளாதாரம், ஒற்றுமை, நல்லிணக்கத்தை பேணும் வகையில் அதன் ஆட்சி அமைப்பு இருக்க வேண்டும் என அவர் கூறினார்.

அம்னோ- பாஸ் கட்சிகளின் கூட்டணி மீண்டும் இன ரீதியிலான அரசியலை மேலோங்கச் செய்திருக்கிறது. அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றவே இவர்களின் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இனி, எக்காலத்திலும் தேசிய முன்னணியின் பல்லின மக்களின் நலனைப் பேணிக்காப்பது போன்ற விவகாரங்கள், இது போன்ற இன ரீதியிலான கூட்டணியால் சாத்தியப்படாது என அவர் உறுதியாகக் கூறினார்.

இதற்கிடையே, அம்னோ- பாஸ் கட்சியின் கூட்டணியால், இனி தேசிய முன்னணி அதன் சாரத்தை இழந்து மலாய்க்காரர்களின் நலனை மட்டும் முக்கியமாகக் கொள்ளும் என தேசிய முன்னணி தலைமைச் செயலாளர் நஸ்ரி அஜிஸ் தெரிவித்திருந்தார்.