Home நாடு “பிற இனத்தவர்கள் மலாய்க்காரர்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்!”- ஹாடி அவாங்

“பிற இனத்தவர்கள் மலாய்க்காரர்களுக்கு நன்றியுடன் இருக்க வேண்டும்!”- ஹாடி அவாங்

967
0
SHARE
Ad

கோலத்திரெங்கானு: அம்னோ- பாஸ் கூட்டணி மலாய்க்காரர் அல்லாதவர்களுக்கு மிரட்டலாக அமையும் எனும் கருத்தினை, பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் மறுத்துள்ளார்.

மலாய்க்காரர்களின் ஒற்றுமை, அரசியல் வேறுபாடு காரணத்தினால் வீழ்ந்து விடக்கூடாது எனும் நோக்கத்தினால்தான் அம்னோ- பாஸ் மட்டுமல்லாமல் பெர்சாத்து கட்சியுடனும் இணைந்து செயல்பட, பாஸ் தயாராக உள்ளது என அவர் கூறினார்.

அம்னோ- பாஸ் கூட்டணி மலாய்க்காரர் அல்லாதவர்கள் மீது தொடுக்கப்படும் போர் என நிதி அமைச்சர் கருத்துரைத்ததற்கு அவர் இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

இதுகாறும், மலேசிய நாட்டில் இதர இனத்தாரின் நம்பிக்கைகளையும், மொழிகளையும் அனுமதித்த மலாய்க்காரர்களின் மனதை எல்லோரும் பாராட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டார். எந்தக் காரணத்தைக் கொண்டும் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு அம்னோ- பாஸ் கூட்டணி அச்சுறுத்தலாக இருக்காது என அவர் உறுதியாகக் கூறினார்.

மேலும், தென்கிழக்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், மலேசியாவில் பிற இனத்தவர்கள் நிம்மதியாகவும், கூடுதல் உரிமைகளுடனும் வாழ்கிறார்கள் என அவர் தெரிவித்தார். இதற்காக, இவர்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.