Home நாடு அன்வாரின் சொத்து மதிப்பு 10.7 மில்லியன் ரிங்கிட்!

அன்வாரின் சொத்து மதிப்பு 10.7 மில்லியன் ரிங்கிட்!

1162
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவரும், போர்ட்டிக்சன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் தனது சொத்து விவரங்களை நேற்று வியாழக்கிழமை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் ஒப்படைத்தார்.

அதன் அடிப்படையில், அவரின் சொத்து மதிப்பு 10.7 மில்லியன் ரிங்கிட்டிற்கும் மேல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த சொத்து விவரங்களில், புக்கிட் சிகாம்புட்டில் உள்ள அவருடைய வீடும் அடங்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.

1974-ஆம் ஆண்டு, குவாந்தானில் 7,000 ரிங்கிட்டிற்கு வாங்கப்பட்ட நிலம் ஒன்றும் அதில் அடங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. அதனை அடுத்து, அவருடைய சேமிப்பு, முதலீடுகள் என 8 மில்லியனுக்கு அதிகமான சொத்துகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இதன் அடிப்படையில் அன்வாரின் சொத்து மதிப்பு, 10.7 மில்லியன் ரிங்கிட்டாக மதிப்பிடப்பட்டுள்ளது.