Home நாடு “இனம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாத தலைமைத்துவம் தேவை!”- அன்வார்

“இனம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாத தலைமைத்துவம் தேவை!”- அன்வார்

1612
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதிலும், மக்களுக்கு பயனளிக்கக் கூடியத் திட்டங்களை உருவாக்குவதிலும், மத்திய அரசாங்கம் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

இன அரசியலை கையில் எடுத்துக் கொண்டுள்ள அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளின் வளர்ச்சியை இதன் மூலமாக தவிர்க்க முடியும் என அவர் தெரிவித்தார்.

ஒருங்கிணைக்கப்பட்ட நம்பிக்கைக் கூட்டணி நமக்குத் தேவை. மக்களின் துன்பங்கள் மற்றும் பொருளாதார சிக்கலை கையாளுவதில், இனம் மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் ஆறுதலளிக்கும் ஒரு தலைமைத்துவம் தேவைப்படுகிறதுஎன அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

செமினி சட்டமன்ற இடைத் தேர்தல் முடிந்த மறுநாள், இனி நம்பிக்கைக் கூட்டணி பாரபட்சமின்றி மலாய்க்காரர்கள் மற்றும் பூமிபுத்ராகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் என பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.