புளோரிடா: அமெரிக்காவின் பீட்டா ஆய்வுக் கூடம் (Beta Analytic Radiocarbon Dating Laboratory) நடத்திய ஆய்வொன்றில், இலங்கையிலுள்ள மன்னார் மனிதப் புதைக்குழி ஐரோப்பிய ஆதிக்க காலத்திற்கு சொந்தமானது எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த மனித எச்சங்கள் கி.பி 1477 – 1642-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டக் காலத்திற்கு உரியது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதப் புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட ஆறு மனித எச்சங்களின் மாதிரிகள், அமெரிக்காவிலுள்ள ஆய்வு கூடத்திடம் கடந்த ஜனவரி மாதம் 25-ஆம் தேதி பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டிருந்தன.
இதுவரையிலும், மன்னார்- சதொசா கட்டிடப் பகுதியிலிருந்து, சுமார் 342 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் 29 மனித எச்சங்கள் சிறுவர்களுடையது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சரியான தரவுகளைப் பெறுவதற்கு மேலும் பல விஞ்ஞான ரீதியிலான விடயங்கள் அமெரிக்கா ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அவற்றை துள்ளியமாக ஆராய வேண்டியுள்ளதாகவும் இலங்கை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.