Home வணிகம்/தொழில் நுட்பம் ஐ-போன்களின் விற்பனை சரிகின்றது

ஐ-போன்களின் விற்பனை சரிகின்றது

1132
0
SHARE
Ad

சான் பிரான்சிஸ்கோ – ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்களைப் பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து தங்களின் பழைய மாதிரி (மாடல்) இரகங்களையே பயன்படுத்தி வருவதால் புதிய ஐ-போன்களின் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தின் வருமானம் இந்த ஆண்டில் 15 விழுக்காடு வரையில் வீழ்ச்சியடையும் என்றும் வணிக வட்டாரங்கள் கணித்துள்ளன.

கடந்த ஆண்டில் 141 பில்லியன் டாலர் வருமானத்தை ஆப்பிள் நிறுவனம் ஈட்டியது.

இதற்கிடையில், ஐபோன்களின் வழியாகச் செயல்படும் கட்டணம் செலுத்தும் குறுஞ்செயலிகளுக்காக ஆப்பிள் அதிக அளவில் தரகுக் கட்டணம் (கமிஷன்) விதிப்பதாகப் புகார் கூறியிருக்கும் நெட்பிலிக்ஸ் அதன் தொடர்பில் ஆப்பிள் நிறுவனம் மீது அதன் ஏகபோக ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில் வழக்கொன்றும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

#TamilSchoolmychoice

உதாரணமாக, நெட்பிலிக்ஸ் மூலம் படங்களைப் பதிவிறக்கம் செய்து பார்க்க ஐ-போன் குறுஞ்செயலியை நீங்கள் பயன்படுத்தினால் அதற்காக 11 அமெரிக்க டாலர் கட்டணமாக விதிக்கப்படுகிறது. அந்தக் கட்டணத்தில் 3 டாலர் 30 காசுகள் ஆப்பிள் நிறுவனத்தால் தரகுக் கட்டணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது மிக அதிகம் என நெட்பிலிக்ஸ் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன.

இதே போன்று மற்ற நிறுவனங்களும் போர்க்கொடி தூக்கினால் – தொடரப்பட்டிருக்கும் வழக்கில் ஆப்பிள் நிறுவனம் தோல்வியடைந்தால் – குறுஞ்செயலிக்கான கட்டணங்களுக்கான ஆப்பிள் விதிக்கும் தரகுக் கட்டணமும் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் காரணமாக, அதன் வருமானத்திலும், இலாபத்திலும் மேலும் பாதிப்புகள் இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.