Home இந்தியா தினகரனின் அமமுகவில் இணைந்தார் பாடகர் மனோ

தினகரனின் அமமுகவில் இணைந்தார் பாடகர் மனோ

1062
0
SHARE
Ad

சென்னை – இந்திய நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் தமிழக அரசியலில் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. சினிமாவில் பாடகராகப் பிரபலமாக இருந்தாலும், அரசியலில் ஈடுபாடு காட்டாமல் இருந்து வந்த பாடகர் மனோ, திடீரென டிடிவி தினகரனின் தலைமையில் இயங்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார்.

டிடிவி தினகரனின் முன்னிலையில் அமமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட மனோ, தனது முடிவின் மூலம் சினிமா, அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழகத்தின் 39 தொகுதிகளில் 1 தொகுதியை கூட்டணித் தோழமைக் கட்சி ஒன்றுக்கு ஒதுக்கியுள்ள தினகரன், எஞ்சிய 38 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஏற்கனவே, நடிகர் ரஞ்சித் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து (பாமக) விலகி அமமுகவில் இணைந்துள்ளார்.